மீண்டும் ஊரடங்கை அறிவித்த நாடு.. கட்டுப்பாட்டு விதிகள் என்னென்ன?
கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து இதோடு ஒரு வருடம் கடந்த நிலையில், தற்போது மீண்டும் இரண்டாம் கட்ட அலையாக உருவெடுத்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுகளும் உலக நாடுகளில் பரவி வருகின்றன.
இந்த நிலையில், சமீப காலமாக பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் இவ்வகை புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரான்சில், நாட்டில் மொத்தம் 42,41,959 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 91,833 பேர் வைரஸ் பாதிப்பால் பலியாகி இருக்கின்றனர். மேலும், நாளுக்கு நாள் புதிய பாதிப்புகள் கிடுகிடுவென அதிகரித்து வருகின்றன.
இதுதொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ், பிரான்ஸ் நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகியிருப்பது போன்ற சூழல் நிலவுகிறது.
தற்போது, இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று (மார்ச் 19) நள்ளிரவு முதல் அடுத்த நான்கு வாரங்களுக்கு கிரேட்டர் பாரிஸ், நைஸ் ஏரியா உள்ளிட்ட 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.