விசா இல்லாம சுற்றுலா போகணுமா? அப்போ இத தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக நாம் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழமை.
இவ்வாறு செல்லும் போது நம்முடைய பட்ஜெட்டின் படி செலவுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்போம்.
மேலும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விசா கண்டிப்பாக இருக்க வேண்டும். இதன் காரணமாக சிலர் வெளிநாடுகளுக்கு செல்ல பயம் கொள்வார்கள்.
ஆனால் இந்தியாவிலிருந்து வெளிநாடுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
விசா இல்லாமல் செல்லக்கூடிய இடங்கள்..
Image - Hotels.com
1. நேபாளம்
இந்தியாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடுகளில் நேபாளமும் ஒன்று. இதனை சுற்றி பார்ப்பதற்கு இந்தியா பயணிகளுக்கு விசா தேவையில்லை. தொல்லைகள் இன்றி நிம்மதியாக இருக்கலாம்.
2. இந்தோனேஷியா
இந்திய பயணிகள் விரும்பு நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு விசா இல்லாமல் பயணம் செல்லலாம். குழந்தைகளுடன் செல்ல விரும்புவர்கள் இங்கு செல்லலாம்.
3. பூட்டான்
இந்த நாடு இந்தியாவில் இருக்கும் இமய மலைக்கு அடியில் இருக்கின்றது. சுற்றுலாவிற்கு பெயர் போன நாடுகளில் இதுவும் ஒன்று. இங்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்ல முடியும். மாறாக சில இடங்கள் தான் பார்க்க முடியும்.
4. செர்பியா
ஐரோப்பாவில் இருக்கும் “செர்பியா” எனும் நகரிற்கு மாத்திரம் 30 நாட்களுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் செல்லலாம். ஆனால் அடிக்கடி இங்கு செல்ல முடியாது ஒரு வருடத்திற்கே 30 நாட்கள் மாத்திரம் தான் செல்லலாம்.
மற்ற நாடுகள்
பார்படாஸ்,டொமினிகா, கிரெனடா, ஹைட்டி, ஹாங்காங், மாலத்தீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |