விலையுயர்ந்த காரில் அமர்ந்து கதறும் ஜிபி முத்து! ஒரு மனுஷனை இப்படியா கதறவைப்பது?
பிக்பாஸிலிருந்து வெளிவந்த ஜிபி முத்து விலையுயர்ந்த காரில் அமர்ந்து கொண்டு கதறும் காணொளி வைரலாகி வருகின்றது.
ஜிபி முத்து
டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ஜிபி முத்து தனது வெகுளித்தனமான பேச்சினால் மக்கள் மனதில் நிலையான இடம் பிடித்தார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதல் கொமடியில் அசத்தியதோடு, இவருக்காகவே ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியினை அவதானித்தார்கள்.
ஆனால் தனது மகன் மீதான அன்பு காரணமாக 13வது நாளில் தானாகவே வெளியேறிய ஜிபி முத்து தனது பழைய பாணியை கையில் எடுத்த இவர் மீண்டும் youtube ல் காணொளி வெளியிட்டு அசத்தி வருகின்றார்.
நண்பரின் விலை உயர்ந்த காரில் அமர்ந்த ஜிபி முத்துவை நண்பர்கள் சேர்ந்து கதற வைத்துள்ளனர். இந்த காட்சியினை தனது யூரியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
அதாவது ஜிபி முத்துவை கிளச்சில் கால் வைக்க சொல்லி விட்டு, பின்பு அதிலிருந்து கால் எடுத்தால் அவ்வளவு தான் வண்டி ஓட ஆரம்பித்துவிடும் என்று கூறியதால், இதற்கு ஜிபி முத்து தனது வழக்கமான வெகுளித்தளத்தை காட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.