முதல்வர் விஜய்யுடன் திருமண வரவேற்பில் த்ரிஷா... இவர் அணிந்து வந்த புடவை இவ்வளவு விலையா?
Actress Trisha Pearl Saree Cost: நடிகை த்ரிஷா இன்று திருமண நிகழ்விற்கு முதல்வர் விஜய்யுடன் சென்ற நிலையில், இவர் அணிந்திருந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம்வரும் த்ரிஷா அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகின்றார். மேலும் முதல்வர் விஜய்யுடன் வெளியிடத்திற்கு சென்று சர்ச்சையிலும் சிக்கி வருகின்றார்.
முதல்வர் விஜய் குடும்பத்தில் பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமே த்ரிஷா என்று கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இதுகுறித்து அவர் எந்வொரு பதிலும், விளக்கமும் கொடுக்கவில்லை.

சமீபத்தில் நடிகர் அஜித் தாய் மறைவிற்கும் முதல்வருடன் சென்றிருந்தார். பின்பு அஜித் கார் ரேஸ் லண்டனில் நடைபெற்ற நிலையில், அப்பொழுதும் த்ரிஷா முதல்வர் விஜய்யுடன் இருந்திருந்தார். ஆனால் முதல்வரின் மனைவி சங்கீதா கொடுத்திருந்த விவாகரத்து வழக்கினை வாபஸ் பெற்றுள்ளார்.
[P4P8VQW
இந்நிலையில் இன்று ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், த்ரிஷா கலந்து கொண்டனர்.]
சென்னையில் மிகவும் கோலாகமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பல முன்னணி அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் முதல்வரின் தாய் ஷோபாவும் வந்திருந்தார்.

த்ரிஷா அணிந்திருந்த புடவை
குறித்த திருமண வரவேற்பு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதில் த்ரிஷா அணிந்திருந்த இளம்சிவப்பு நிற சேலை அதிக கவனம் ஈர்த்துள்ளது.
மணப்பெண்ணை விட த்ரிஷாவின் புடவையில் தான் கவனம் அதிகமாக இருந்தது. காரணம் என்னவெனில் இந்த புடவையின் கைவேலைப்பாடு ஆகும்.
பவுடர் பிங்க் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இளம்சிவப்பு நிறத்தில் முத்துக்கள், மணிகள், கற்கள் பதித்திருந்தது. இதன் மதிப்பு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
புடவைக்கு ஏற்ப நடிகை த்ரிஷா அணிந்திருந்த நெக்லஸ் அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் மேக்கப் புடவைக்கு ஏற்ப செய்துள்ளதுார்.
ஆனால் தலை அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தலைமுடியை விரித்து சிம்பிளாக வந்துள்ளார். ஆக மொத்தம் மணப்பெண்ணை விட நடிகை த்ரிஷா மீதே ரசிகர்களின் கவனம் அதிகமாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |