திடீரென அதிகரிக்கும் AY.4.2 வகை கொரோனா - ஒரே நாளில் 1100 பேர் பாதிப்பு!
கொரோனா வைரஸ் உருமாறிய வகையான AY.4.2. வகை இந்தியாவில், கொரோனா பரவி வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் 7 பேருக்கு புதிய AY.4.2. வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் அங்கு 3-ம் அலை தொடங்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,86,835 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இதுவரை 38,037 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,40,339 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,430 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
இதனிடையே, தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை உருமாறிய கொரோனா கேஸ்கள் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1100-க்கும் கீழே சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,98,493 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 12 பேர் பலியாகி உள்ளனர்.