இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா உச்சமடையும்- விஞ்ஞானிகள் விடுத்த எச்சரிக்கை!
இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. என்னதான் அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், அதை பின்பற்றாத மக்களே அதிகம்.
மேலும், நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
மே மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பாதுகப்பாக இருப்பது மிக அவசியம்.