கொரோனா தடுப்பூசி செலுத்தவதற்கு முன்னும் பின்னும் செய்யப்படவேண்டிய விஷயங்கள் என்னென்ன?
கொரோனா தடுப்பூசியை இதுவரையில் 1.63 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். அதில் யாருக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளும் ஏற்படவில்லை என்றாலும், சிலருக்கு சில பக்க விளைவுகள் அல்லது லேசான நோயைப் பதிவு செய்துள்ளனர். ஓர் சிறிய எண்ணிக்கையில் இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்பார்க்கப்பட்டது என்பதையும் இவை எந்த விதத்திலும் மக்களைத் தடுக்கக் கூடாது என்பதையும் ஏராளமான வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தடுப்பூசி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் மற்றும் தடுப்பூசி போடுவதற்கு முன்பு நீங்கள் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகள் தெரிந்துகொள்வோம்... தடுப்பூசி போடுவதற்கு முன் ஒரு நபருக்கு மருந்துகளுக்கு ஒவ்வாமை இருந்தால், ஓர் மருத்துவ பயிற்சியாளரிடமிருந்து all-clear பதிவு பெறுவது முக்கியம். ஒரு முழுமையான ரத்த எண்ணிக்கை (சிபிசி), சி-ரியாக்டிவ் புரதம் (சிஆர்பி) அல்லது இம்யூனோகுளோபுலின்-இ (ஐஜிஇ) அளவை மருத்துவ ஆலோசனையின் கீழ் சரிபார்க்கலாம்.
தடுப்பூசிக்கு முன்னதாக ஒருவர் நன்றாக சாப்பிட்டு மருந்துகள் ஏதேனும் இருந்தால் அதனை உட்கொண்டிருக்க வேண்டும். ஒருவர் முடிந்தவரை நிதானமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். பயத்தில் இருக்கும் மக்கள், ஆலோசனை பெற்றுக்கொள்வது பெரும் உதவியாக இருக்கும்.நீரிழிவு நோய் அல்லது ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
புற்றுநோய் நோயாளிகள், குறிப்பாக கீமோதெரபியில் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும். கோவிட் -19 சிகிச்சையின் ஒரு பகுதியாக ரத்த பிளாஸ்மா அல்லது மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளைப் பெற்றவர்கள் அல்லது அதனைக் கடந்த ஒன்றரை மாதங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது தடுப்பூசி எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தடுப்பூசி போட்டபின் உடனடி கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளிலிருந்து தடுப்பதற்காகத் தடுப்பூசி பெறுபவர் தடுப்பூசி மையத்திலேயே கண்காணிக்கப்படுகிறார். எந்தவித பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்கள் வெளியேற அனுமதிக்கப்படுகிறார்கள். ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி மற்றும் காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் பொதுவானவை.
இதற்கு பீதி அடைய வேண்டாம். குளிர் மற்றும் சோர்வு போன்ற வேறு சில பக்க விளைவுகளும் எதிர்பார்க்கப்படலாம். இவை சில நாட்களில் போய்விடும்.
எனவே, தடுப்பூசி போட்ட பிறகும் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். ஒரு தடுப்பூசி எடுக்கப்பட்டதால் மாஸ்க், கை சுகாதாரம் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கைவிடக்கூடாது.