கொரோனாவின் கோரத்தாண்டவம்: அழுகையை அடக்கமுடியாமல் கதறும் செவிலியரின் காட்சி
கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இரண்டாவது அலையின் தாக்கம் பெரும் அழிவினை ஏற்படுத்தி வருகின்றது.
இந்நோயின் தாக்கம் குறித்து பிரபலங்கள், மருத்துவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இதுகுறித்து செவிலியர் ஒருவர் கண்ணீர் மல்க பேசியுள்ளார். தன்னுடன் வேலை செய்யும் செவிலியரை முதல் நாள் பார்த்தால் மறுநாள் உயிரிழந்துவிடுகின்றார் என்று மருத்துவர்களையும், செவிலியர்களையும் குறைகூறுவதை குறித்து பேசியுள்ளார்.
இதுமட்டுமின்றி புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியரின் ஆடியோ பதிவு ஒன்றும் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த செவிலியர் கூறுகையில், "தரமற்ற பி.பி.இ கிட் குறித்து புதுவை ஆளுநர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கதிர் கிராமம் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கு, பலரின் உதவிகள் மூலம் உபகரணங்கள் வாங்கி கொடுத்தும், எங்களுக்குத் தரமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை.
தரமில்லாத பிபிஇ கிட் அணிவதால் ஒரு மணிநேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து பாதுகாப்பு உடை அணிய முடியாமல் பலர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது வேதனையை ஏற்படுத்தி வருகின்றது.