கொரோனா இரண்டாவது அலை பீதி.. மேலும் 8 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து ஏற்கனவே 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் 4 மாவட்டங்களில் இரவு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டது.
அதில், லூதியானா, பாட்டியாலா, மொகாலி, உள்பட 8 மாவட்டங்களில் இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதனால், மாநில பள்ளிக் கல்வித் துறையானது அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை கல்வித்துறை அமைச்சர் பிறப்பித்தார்.
மேலும், பஞ்சாபில் 1318 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அங்கு இதுவரை மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரத்து 753 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.