கொரோனா இரண்டாவது அலை விஸ்வரூபம்.. அதிரடியாக ஊரடங்கை அமல்படுத்திய நாடு!
கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு பிறப்பித்து வருகின்றனர். அந்தவகையில், ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இங்கிலாந்து நாட்டில் மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மரபணு மாற்றமடைந்த கொரோனா இங்கிலாந்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவ தொடங்கியது.
இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்ஸ், இத்தாலி, ரஷியா, ஜெர்மனி போன்ற நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. இதனால், ஐரோப்பிய நாடுகள் கொரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டில் உள்ள 15 நகரங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பாரிஸ் நகரில் அத்தியாவசியம் இல்லாத கடைகளை ஒரு மாதம் மூடிவைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலந்து நாட்டிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மூன்று வாரங்கள் கடைகள், உணவகங்கள், திரையரங்கம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.