தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. ஒரே நாளில் 474 பேர் பாதிப்பு- 5 பேர் பலி!
இந்தியாவில் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலலும் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை தற்போது ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இன்று 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 52 ஆயிரத்து 016 ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் மட்டும் 171 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது 4,009 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வைரஸ் பரவியவர்களில் இன்று ஒரே நாளில் 482 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 35 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 501ஆக அதிகரித்துள்ளது.