தமிழகத்தில் ஒரே நாளில் 837 பேருக்கு கொரோனா.. 4 பேர் பலி! எச்சரிக்கை விடுத்த அரசு
கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருட காலமாகிய நிலையில், மீண்டும் அதன் இரண்டாவது அலையாக பரவ தொடங்க இருப்பது மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே, கேரளா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் ஊரடங்கு அறிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் சட்டமன்ற தேர்தல் பணிகளால் மறந்துவிட்டு அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர்.
இதனால், தேர்தலுக்கு பின் ஊரடங்கு அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பு 836 பேருக்கு பாதித்துள்ளது. அதிலும், சென்னையில் மட்டுமே முதலில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. தற்போது கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூரிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்த சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை இன்று 5 ஆயிரத்து 149 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் எனவும், தேவையற்ற பயணத்தை தவிர்க்கவேண்டும் எனவும், சமூக இடைவேளியை பின்பற்றவும் அறிவுறுத்தி வருகின்றனர்.