நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா... இந்தியாவில் அதிரடியாக போடப்பட்ட ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை எண்ணி மாநில அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் ஆகியவை மிகவும் நிம்மதியாக இருந்தன. ஒரு பக்கம் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில், மறுபுறம் கோவிட்-19 பாதிப்புகள் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.
இந்த சூழலில் அண்டை மாநிலங்களில் நோய் பரவல் அதிகரித்து வருவதைக் கவனத்தில் கொண்டு புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தால் இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் மஹாராஸ்டிரா பஞ்பாப் அகிய மாநிலங்களில் சில பகுதிகளில் உரடங்கு பிறப்பிக்கப்பட்டள்ளது.
முக்கியமாக தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கொரோனா மிகவும் அதிகரித்து வருகின்றது. இது நிச்சயம் மக்களுக்கான ரெட் அலெர்ட். வெளியே செல்லும்போது மாஸ்க் மற்றும் சானிடைசர் பயன்படுத்தி மேலும் கவனத்துடன் இருப்பது அவசியம் என்று சுகாதார துறை தெரிவித்துள்ளது.
மேலும் தமிகழத்திலும் பெருந்தொற்று ஏற்பட்டுவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.