ஒரே நாளில் அமெரிக்காவில் 350 பேர் கொரோனாவால் பலி!
கொரோனா வைரஸ் உலகமெங்கும் தற்போது மீண்டும், பரவ தொடங்கியுள்ளது. அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை உலக அளவில் 24.71 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26,335 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,67,99,970 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 350 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,66,117 ஆக உள்ளது.
அமெரிக்காவில் இதுவரை 3,66,92,264 பேர் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 93,41,589 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.