தமிழகத்தை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா.. ஒரே நாளில் ஆயிரத்தை கடந்தது!
கொரோனா இரண்டாவது அலை மீண்டும் விஸ்வரூபம் ஒரு பக்கம் எடுக்க அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாக்குகளை சேகரித்து வருகின்றனர் அரசியல் கட்சியினர்கள். மேலும், தமிழகத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக நேற்று ஆயிரத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு பதிவாகியிருந்தது.
இதனையடுத்து, 2-வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுகுறித்து, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,. தமிழகத்தில் இன்று 1,243- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 458- பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இன்று ஒரே நாளில் 8- பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 65 ஆயிரத்து 693- ஆக உயர்ந்துள்ளது.