கொரோனாவால் பிரபல சின்னத்திரை இயக்குனர் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல சின்னத்திரை இயக்குனர் திடீரென உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுவதும் கொடூரமாக மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் காரணமாக உலக அளவில் பலர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சமீப காலமாக குறைந்து வருகிறது.
இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் சரிந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இருந்தும் மக்களிடம் கொரோனா குறித்த பயம் முற்றிலும் போய்விடவில்லை.
இந்த கொரோனா காரணமாக, பல சினிமா பிரபலங்கள் உயிரிழந்துள்ளனர். ஹாலிவுட்டில் இருந்து நம்மூரைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வரை பல சினிமா துறையினரின் உயிரை கொரோனா வாங்கியிருக்கிறது.
இந்நிலையில், பிரபல வங்காள மொழி சின்னத்திரை இயக்குனர் தேபிதாஸ் பட்டாச்சார்யா கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் அதற்காக மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் விரைவில் உடல் நலம்பெற்று திரும்புவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இன்று உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.