அதிகரிக்கும் கொரோனா.. மகாராஷ்டிராவை அடுத்து அடுத்த மாநிலத்திற்கும் ஊரடங்கு.. எச்சரிக்கை விடுத்த அரசு!
கொரோனா வைரஸ் இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், தமிழகம் கேரளா மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில அரசுகள் எச்சரித்துள்ளன. இதனைத்தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், மகாராஷ்டிராவில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா பரவல் இருந்து வருவதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தை அடுத்து மத்திய பிரதேச மாநிலத்திலும் ஒரு சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று அல்லது நாளை முதல் இந்தூர், போபால் உள்ளிட்ட ஒரு சில நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து ரயில் பேருந்து விமானம் மூலம் வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளனர்.