தூங்கும் பயணிகளை இப்படியா செய்வது? ரயில்வே பொலிசின் மோசமான செயல்
ரயில் நிலையத்தில் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் மீது ரயில்வே பொலிசார் தண்ணீரை தெளித்து எழுப்பிய காட்சி வைரலாகி வருகின்றது.
ரயில்வே பொலிசாரின் மோசமான செயல்
புனே ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ரயில்வே பொலிசார் ஒருவர் தண்ணீர் பட்டிலுடன் நடந்து வந்து, குறித்த பயணிகள் மீது தண்ணீரை தெளித்துள்ளார்.
மனிதாபிமானமற்ற இந்த செயலை அவதானித்த பலரும் கண்டித்து வரும் நிலையில், இக்காட்சி புனேவின் மண்டல ரயில்வே மேலாளர் இந்து துபேயின் கவனத்துக்கும் சென்றுள்ளது. அவர், இது மிகவும் வருந்தத்தக்க சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பயணிகள் தூங்குவது மற்றவர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்காக இவ்வாறு நடத்துவது நியாயம் அல்ல என்று கூறி கண்டித்து வருகின்றனர்.
RIP Humanity ??
— ?? Rupen Chowdhury ? (@rupen_chowdhury) June 30, 2023
Pune Railway Station pic.twitter.com/M9VwSNH0zn
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |