லோகேஷ் மார்க்கட்டை இறக்கியதா கூலி? கொதிப்பில் இலங்கை ரசிகர்கள்
மற்ற திரைப்படங்களை விட கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜீன் மார்க்கட்டை இறக்கியுள்ளதாக இன்றைய தினம் திரையில் படம் பார்த்த ரசிகர்கள் கூறியுள்ளனர்.
கூலி படம்
தமிழ் சினிமாவில் என்றும் மாறாத ஸ்டாராக ரஜினிகாந்த் பார்க்கப்படுகிறார்.
இவருடைய சினிமா பயணத்தை தொடங்கி 50 ஆண்டுகள் ஆனதையடுத்து பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருமே அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான கூலி திரைப்படம் திரையில் வெளியாகி வெற்றிநடைப்போட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். அத்துடன் இளசுகளை தன்னுடைய இசையால் கட்டி வைத்திருக்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், கூலி திரைப்படத்தில் ஆமீர்கான், சத்யராஜ், நாகார்ஜூனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சவுபின் ஷாயிர் உள்ளிட்ட புகழ் பெற்ற நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள்.
பட்ஜெட் விவரங்கள்
இந்த நிலையில், கூலி திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ. 355 கோடி. இதில் நடிகர்கள், நடிகைகளின் சம்பளம் மட்டுமே ரூ. 275 கோடி. ரூ. 355 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள படம், ரூ. 530 கோடிக்கு சன் பிக்சர்ஸ் பிசினஸ் செய்துள்ளனர்.
அதில், திரையரங்க உரிமைகள், சாட்டிலைட் உரிமை, ஓடிடி உரிமை உள்ளிட்டன அடங்கும். அத்துடன் ரூ. 355 கோடி பட்ஜெட் செலவு போக, ரூ. 175 கோடி சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு லாபம் கிடைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
இவ்வளவு பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தை பார்த்த இலங்கை ரசிகர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |