நிகழ்ச்சித் தொகுப்பாளினியிடம் எல்லை மீறிய கூல் சுரேஸ்: வைரலாகும் வீடியோ காட்சி
இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் அங்கிருந்த பெண் தொகுப்பாளினியிடம் அத்துமீறி நடந்துக் கொண்ட சம்பவம் தற்போது பெரும் வைரலாகி வருகின்றது.
இசை நிகழச்சியில் எல்லைமீறிய கூல் சுரேஷ்
திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்து பிரபலமான மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கூல் சுரேஷ் நடந்துக் கொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினராக பாக்யராஜ் அவர்களும் கலந்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்ட பின்னர் நடிகர் கூல் சுரேஷ் பேசிக் கொண்டிருக்கும் போது தன் கையில் இருந்த மற்றொரு மாலையை "எல்லோருக்கும் மாலை போடுகிறோமே, நம்மை வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடுகிறோமா?" என்று கேட்டு பக்கத்தில் நின்றுக் கொண்டிருந்த தொகுப்பாளினிக்கு அணிவித்திருக்கிறார் இதனால் அவர் கடும் கோபமடைந்திருக்கிறார்.
இவரின் இந்த செயல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு அந்த வீடியோ காட்சியும் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |