சுவர் ஏறி குதித்து வீட்டைவிட்டு வெளியேற விபரீத முயற்சி... கூல் சுரேஷிற்கு என்ன நடந்தது?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் ஒன்றில் சென்ட்ராயன் செய்தது போன்று கூல் சுரேஷ் சுவர் ஏறி குதித்து வெளியேற முயற்சித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது இரண்டு மாதம் நிறைவடைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா என 12 பேர் வெளியேறியுள்ளனர்.
இதில் இரண்டு பேர் உள்ளே மீண்டும் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். தற்போது 70 நாட்களை கடந்து செல்லும் நிலையில், வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் இருக்கும் நிலையில் தற்போது டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.
இந்த போட்டியில் வெற்றிபெறும் நபர் அடுத்துவரும் வாரங்களில் நாமினேஷன் ஆகாமல் நேரடியாக ஃபைனல் வாரத்திற்கு சென்றுவிடுவார்கள்.
இன்று போட்டியாளர்கள் கையில் பணம் கொடுக்கப்பட்டு அதற்கான டாஸ்க் ஒன்றினை அறிவித்துள்ளார் பிக் பாஸ். தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் கூல் சுரேஷ் விபரீத முடிவை எடுத்துள்ளார். அவருக்கு பிக்பாஸிற்குள் என்ன நடந்தது என்பதை இன்று பொறுத்திருந்து பார்ப்போம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |