பிக்பாஸை அவதூறாக பேசிய கூல் சுரேஷ்.. வீட்டிற்கு அழைத்து பலித்தீர்த்த கமல்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய கூல் சுரேஷ் தற்போது நிகழ்ச்சிக்குள் இருப்பதை ரசிகர்கள் தறகுறைவாக பேசி வருகிறார்கள்.
பிக்பாஸ் 7
நாம் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆறு சீசன்களை வெற்றிக்கரமாக நிறைவு செய்த பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடு எனக் கூறி போட்டியாளர்களுக்கு டுவிஸ்ட் கொடுத்துள்ளது.
கூல் சுரேஷின் பிக்பாஸ் ஆவேசம்
இந்த நிலையில், முக்கிய போட்டியாளர்களில் ஒருவரான கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டிற்குள் வர முன்னரே பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவதூறாக பேசியுள்ளார்.
அந்த வீடியோவில், “ பிக் பாஸ் நிகழ்ச்சி எனக்கு தேவை இல்லை. எத்தனை கோடி கொடுத்தாலும், நான் போகமாட்டேன். என்னங்க பிக் பாஸ் சின்ன சின்ன பொண்ணுங்களை எல்லாம் கூப்பிட்டு வந்து காலையில பாட்டு பாடுனதும் அரைகுறை ஆடையுடன் ஆட விடுகிறார்கள்.
பிக் பாஸ் டைட்டில் பட்டம் வாங்கி வெளியே வந்து யார் பெரிய இடத்திற்க்கு போயிருக்கிங்க சொல்லுங்க பார்க்கலாம் “ என தறகுறைவாக பேசியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சியையும் தற்போது பிக்பாஸ் வீட்டிக்குள் கூல் சுரேஷ் நடந்து கொள்வதையும் வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
அத்துடன் “ கூல் சுரேஷ் இப்படி அவதூறாக பேசியதை பார்த்து தான் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார்கள்” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |