குளிர்பானம் வாங்கி குடித்த 13 வயது சிறுமி: உடல் நீல நிறமாக மாறி உயிரிழந்த சோகம்
சென்னையில் மளிகை கடைசியில் குளிர்பானம் வாங்கி குடித்த சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெசண்ட்நகர் ஓடைக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ் – காயத்ரி தம்பதியின் இளைய மகள் தரணி(13) நேற்று முன் தினம் வீட்டின் அருகே இருக்கும் மளிகை கடையில் ரூ.10 கொடுத்து Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி குடித்திருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுத்ததுடன், அவரது மூக்கிலிருந்து ரத்தத்துடன் சளியும் வெளியே வந்துள்ளது.
இதனை அவதானித்த அக்கா பெற்றோரிடம் கூறவே, சிறுமியை உடனே மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த பொலிசார், வழக்கு பதிவு செய்து சிறுமி குளிர்பானம் வாங்கிய கடையில் உள்ள குளிர்பானங்களை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வு முடிவுகள் வந்த பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மீதம் இருந்த குளிர்பானத்தினை கைப்பற்றிய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், குறித்த குளிர்பானம் தயாரிக்கும் கம்பெனிக்கு சீல் வைத்துள்ளனர்.
பரிசோதனை முடிவுகள் வரும் வரைக்கும் அந்த குளிர்பான ஆலையை மூடிவைக்க உத்தரவிட்டுள்ளனர்.