கடைசி நேரத்தில் மாறிய டைட்டில் வின்னர்: குக் வித் கோமாளியின் வெற்றியாளர் இவர்தான்
குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக மைம் கோபி தெரிவாகியுள்ளார்.
குக் வித் கோமாளி
இன்று குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியின் பைனல் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதில் மைம் கோபி, விசித்திரா, சிவாங்கி, ஸ்ருஷ்டி, ஆண்ட்ரியன் மற்றும் கிரண் என ஆறு போட்டியாளர்கள் பைனலிஸ்ட்டாக போட்டி போட்டுள்ளனர்.
இந்த ஆறு பேரில் மைம் கோபி தான் குக் வித் கோமாளி சீசன் 4ன் டைட்டில் வின்னர் என ஏற்கனவே தகவல் வெளியாகிவிட்டது. இரண்டாம் இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்துள்ளார்கள் என கூறப்பட்டது.
மக்கள் கூறியபடியே ஆரம்பத்தில் இருந்தே நடுவர்களை அசத்தி வந்த மைம் கோபி தான் டைட்டில் ஜெயித்து இருக்கிறார். 2வது இடம் ஸ்ருஷ்டிக்கும், 3ம் இடம் விசித்ராவுக்கும் கிடைத்துள்ளது.
முதல் இடத்தை பிடித்த மைம் கோபிக்கு 10லட்சம் ரூபாயும், இரண்டாவது இடத்தை பிடித்த ஸ்ருஷ்டிக்கு 5 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது
இந்த சீசன் முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் மற்றும் பிரபலங்கள் எமோஷ்னலாக தான் ஷோவை முடித்து இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |