குக்கு வித் கோமாளி சீசன் 7 : வெளியானது போட்டியாளர்களின் முழு விபரம்
விஜய் தொலைக்காட்சியில் 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்த குக் வித் கோமாளி சீசன் 7 வரும் சனிக்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்த சீசனுக்கான போட்டியாளர்கள் ஜோடியாக தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.இது குறித்த விபரங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

குக்வித் கோமாளி சீசன்- 7
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. அவர்கள் எல்லோரும் விரைவில் தொடங்க இருக்கும் 7ஆவது சீசனுக்காக தான் காத்திருக்கிறார்கள்.
அந்த நிகழ்சியில் ஏற்கனவே மூன்று நடுவர்கள் இருக்கும் நிலையில், இந்த முறை நடிகை ரோஜா புது நடுவராக இணைந்திருக்கிறார்.

மேலும் இந்த முறை புதிய முயற்ச்சியாக போட்டியாளர்கள் ஜோடியாக தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அது மாத்திரமன்றி நிஜ ஜோடிகளை தான் விஜய் தொலைக்காட்சி களமிறக்கி இருக்கிறது.
போட்டியாளர்கள் பட்டியல்
அரவிந்த் சேஜு - சங்கீதா
பிக் பாஸ் சம்யுக்தா - அனிருதா ஸ்ரீகாந்த்
அறந்தாங்கி நிஷா மற்றும் அவர் கணவர்
கானா வினோத் மற்றும் அவர் மனைவி.
பாடகர் மனோ - ஜமீலா
ரியாஸ் - ரிஷா உட்பட மொத்தம் 6 ஜோடிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
இந்நிலையில், தற்போது Youtube-ல் பிரபலமாக இருந்து தற்போது படங்களிலும் நடித்து வரும் டிராவிட் செல்வம் மற்றும் அவர் மனைவியும் இந்த சீசனில் போட்டியாளர்களாக இணைய போவதாக புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
உன்னைய வச்சி எப்படி சமாளிக்க போறாங்களோ.. 😂 Introducing couple cooks Dravid & Raaji 😀😍
— Vijay Television (@vijaytelevision) April 1, 2026
இனி Couple Cooks-ஓட Double Trouble 😀 Cooku with Comali Season 7 - ஏப்ரல் 4 முதல் சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..#DoubleTrouble #CookuWithComaliSeason7… pic.twitter.com/UY63nnDZkG
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |