குக் வித் கோமானி புகழ் மகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கிறார் தெரியுமா?
குக் வித் கோமாளி புகழ் தனது குழந்தைக்கு பெயர்சூட்டு விழா நடத்தியுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் புகழ்
குக் வித் கோமாளி மூலமாக பிரபலம் ஆன புகழ் தற்போது சினிமாவில் நகைச்சுவை நடிகராக களமிறங்கி கலக்கியுள்ளார். மேலும் ஹீரோவாக Mr Zoo Keeper என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இவரது மனைவி பென்ஸி. இந்த தம்பதிக்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து, ரசிகர்கள் பிரபலங்கள் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
தற்போது புகழ் அவரது மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை நடத்தி இருக்கிறார். பு.ரித்தன்யா என அவர் மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்.
"கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே."
"எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என புகழ் பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |