மணிமேகலைக்காக உருகும் ரசிகர்கள்! அவரை பற்றிய சில தகவல்கள்
திரையில் ஏராளமானோர் தோன்றினாலும் தனித்து சிலர் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள். அது அவர்களின் குணமாகவோ அல்லது அவர்களின் பேச்சுத் திறமையாலோ தான் சாத்தியம்.
இவ்வாறு மக்களை கவர்ந்தவர் தான் குக் வித் கோமாளி மணிமேகலை. அவர் பற்றி நீங்கள் அறிந்திராத பல தகவல்கள் இதோ,
பிறந்தது
மணிமேகலை தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் 7ஆம் திகதி மே 1993 இல் ராமஅய்யப்பன் மற்றும் ஜோதி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார்.
மூன்றாம் வகுப்பு வரை தனது சொந்த ஊரான கோவையில் இருந்தவர்கள் பிறகு, குடும்பத்துடன் சென்னைக்குச் சென்று, சென்னை செயின்ட் ஜான்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
இவர் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டதாரி ஆவார்.
காதல்
சன்மியூசிக்கில் வேலை செய்துக் கொண்டிருந்தப்போது ராகவா லாரன்ஸின் திரைப்படம் ஒன்று வெளியாகியிருந்தது. அத்திரைப்படத்தில் பழைய பாடல் ஒன்றை ரிமேக் செய்திருப்பார்கள்.
அந்தப் பாடலில் ராகவா லாரான்ஸ்க்கு இணையாக ஒருவர் நடனம் ஆடுவார். அவரைப் பார்த்ததும் மனம் விரும்பி இரண்டு மூன்று தடவை தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தார்.
ஒருநாள் அவரை நேரில் காணச் சென்று விபத்துக்குள்ளாகியும் இருந்தார். இதிலிருந்து ஹூசைனுக்கும் மணிமேகலைக்கும் காதல் ஆரம்பித்தது.
இவர்களின் காதல் நாளடைவில் இவர்கள் வீட்டுக்குத் தெரியவர ஹூசைன் வேறு மதம் என்பதால் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. இதனால் 2017 பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார்.
தொழில் பயணம்
பட்டதாரியானது 2009ஆம் ஆண்டு சன்மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார். அதற்குப்பிறகு ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
திருமணத்திற்குப் பிறகு சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சிக்கு தாவினார். அதில் முதல் நிகழ்ச்சியாக “கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் 2” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பிறகு தன் கணவருடன் மிஸ்டர் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருந்து மக்கள் வீட்டுப் பிள்ளையாக மாறினார். இவ்வாறு விஜய் டீவியின் ஆஸ்தான நபராக மாற பிறகு தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டார்.
மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 1இலிருந்து 3 வரைக்கும் தொடர்ந்து கோமாளியாக கலந்துக் கொண்டு வித விதமான கெட்டப்பில் அனைவரையும் சிரிக்க வைத்தார். 4ஆவது சீசனிலும் கோமாளியாக இருந்தவர் தற்போது நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், இவர் தற்போது ‘ஹூசைன் மணிமேகலை’ பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து நடாத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.