சமையலின் சுவை தாறுமாறாக இருக்க வேண்டுமா? இதோ அருமையான டிப்ஸ்
By Sinduja
சமையல் என்பது ஒரு கலை. உணவு தான் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. அந்த உணவை சுவையாகவும் அன்பாகவும் சமைத்து பரிமாறுவதில்தான் அதை உண்பவர்களின் திருப்தி உள்ளது.
அதுமாத்திரமின்றி உணவை சுவையாக மாற்றுவதற்கு சில யுக்திகள் உள்ளன.
அவற்றில் சில டிப்ஸ்...
- தயிரானது புளிக்கின்ற நிலைக்கு வரும்போது, அதில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் அதிகம் புளிக்காது.
- சாதம் உதிரியாக வரவேண்டுமென்றால், அரிசியை ஊற வைக்கும்போது சில ஐஸ்கட்டிகளை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சப்பாத்தி மா பிசையும்போது சிறிது பால் சேர்த்துக் கொண்டால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
- பருப்புடன் சிறிது நெய் சேர்த்து வேகவைத்தால் சாம்பார் சுவையாக இருக்கும்.
- முட்டையின் மீது லேசாக எண்ணெய் தடவி வைத்தால் முட்டை விரைவில் கெட்டுப் போகாது.
- உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.
- பால் காய்ச்சும் பாத்திரத்தின் மேல் ஒரு மரக் கரண்டியை வைத்தால் பால் பொங்கி கீழே வடியாது.
- புளி குழம்பு சுவையாக இருக்க சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US