வீட்டில் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்யலாம்? ரெசிபி இதோ
பொதுவாக நம் எல்லோரது வீட்டிலும் எதாவது ஒருசிப்ஸ் மாலைநேரத்தில் செய்து சாப்பிடுவது வழக்கம்.
இந்த உணவு பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ண வேண்டும். உருளைக்கழங்கில் அதிகளவிலான உடலுக்கு தேவைப்பட கூடிய சத்துக்கள் இருக்கின்றன.
இந்த உருளைக்கழங்கை வைத்து மாலைநேரத்தில் என்ன வகையான சிப்ஸ் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.இன்று நாம் செய்யப்போகும் உணவிற்கு பெயர் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ஆகும்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 1 லீட்டர்
- உருளைக்கிழங்கு - 5
- உப்பு - தேவையான அளவு
- சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி
- மிளகுப்பொடி - 1 தேக்கரணடி
- இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி
- பூண்டு - 2 தேக்கரண்டி
- சோளமா - 2 தேக்கரண்டி
- எண்ணெய் - தேவையான அளவு
- வெண்ணை - 3 தேக்கரண்டி
செய்யும் முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் உருளைகிழக்கை போட்டு நன்றாக அவித்து எடுக்க வேண்டும். இதை நன்றாக மசித்து எடுத்து கொள்ள வேண்டும்.
இந்த மசித்த உருளைக்கழங்கில் உப்பு சில்லி பிளேக்ஸ் மிளகுப்பொடி இட்டாலியன் சீசனிங் சோள மா பொடியாக நறுக்கிய பூண்டையும் சேர்க்க வேண்டும்.
இதன் பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கெள்ள வேண்டும். பின்னர் இதை உள்ளங்கையில் வைத்து உருண்டைகளாக பிடித்து எடுத்து கெள்ள வேண்டும்.
இதை இன்னுமொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அதில் இந்த உருண்டைகளை பொரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்தால் உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |