அரிசியை கழுவாமல் சமைத்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் ?
இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று தான் சாதம். இந்தியர்கள் ஒரு நாளைக்கு கூட சாதம் சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கண்டிப்பாக சாதத்தை சாப்பிட வேண்டும். சாதத்தை கொண்டு பலவகையான உணவுகளை சமைக்கலாம்.
அந்தவகையில், நாம் அன்றாடம் சமைக்கும் அரிசியை கழுவாமல் சமைத்து சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.
பண்ணையிலிருந்து கடைக்கு அரிசி கொண்டு வரும்போது அதில் அழுக்கு, மணல் கலந்திருப்பதால் அதை சுத்தம் செய்ய வேண்டும்.
அரிசியைச் கழுவாமல் சமைத்தால், சில உடல்நலப் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்?
அரிசியில் கழுவாமல் சமைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் தூசி, அழுக்கு மற்றும் கிருமிகளால் செரிமானப் பிரச்சினைகள் மற்றும் ஒவ்வாமை ஏற்படலாம்.
மேலும், அரிசியைக் கழுவாமல் சமைத்தால், அரிசியின் சுவை மாறக்கூடும்.
அரிசியைக் கழுவாமல் சமைத்தால், அரிசி வேக அதிக நேரமாகும். மேலும், சாதம் மிகவும் ஒட்டும் தன்மையுடன் மாறும்.
அரிசியை கழுவாமல் சமைப்பதினால் சாதம் சரியாக வேகாது. இது ஜீரணிக்க கடினமாக இருக்கும்.
எனவே, அரிசியை சமைப்பதற்கு முன் இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீரில் நன்கு கழுவுவது மிகவும் முக்கியம்.
அதேபோல், அரிசியை நன்கு கழுவிய பின் 10 நிமிடங்களாவது ஊற வைத்து சமைப்பது மிக முக்கியம்.