மண்பானை சமையலில் சமைக்கிறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க
மண்பானையில் சமைக்கும் போது செய்யக்கூடாத சில தவறுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு மண்பானையில் சமைத்து சாப்பிட்டு வந்தனர். ஆனால் காலத்தின் மாற்றம் அதனை பின்னோக்கி நகர்த்திவிட்டு, உடம்பிற்கு கேடு விளைவிக்கும் நான்ஸ்டிக் வகை பாத்திரத்தில் சமைக்க ஆரம்பித்துவிட்டனர்.
ஆனால் சமீப காலமாக மீண்டும் மண்பானை, இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கத்தை மக்கள் செய்து வருகின்றனர். தற்போது மண் பாண்டத்தில் சமைக்கும் போது நாம் செய்யக்கூடாத சில விடயங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
செய்யக்கூடாத தவறுகள்
மண்பாண்டங்கள் எளிதில் உடைந்துவிடும் என்பதால் பிற பாத்திரங்களுடன் வைக்காமல் தனியாவ வைத்து பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் ஒன்றன் மேல் ஒன்றை வைக்க வேண்டாம்.
மண்பாண்டத்தில் சமைக்கும் போது உலோக கரண்டிகளை பயன்படுத்தாமல் மரக்கரண்டிகளைப் பயன்படுத்த வேண்டும். இதனால் பாண்டத்தில் எந்தவித சேதாரமும் ஏற்படாமல் இருக்கும்.
மண்பாண்டத்தினை உலோக ஸ்கரப்பர், சோப்பு கொண்டு சுத்தம் செய்வது கூடாது. சோப்பு கொண்டு சுத்தம் செய்தால் உணவு மாசுபாட்டின் அபாயத்தை அதிகரிக்கும். இதற்கு பதிலாக பேக்கிங் சோடா, உப்பு மற்றும் தேங்காய் நார் கொண்டு சுத்தம் செய்யலாம்.
மண் பானையை சுத்தம் செய்த பின்பு ஈரம் இல்லாத இடத்தில் அதனை காய வைத்து, சரியான இடத்தில் வைக்க வேண்டும். அதாவது உலர்ந்த இடத்தில் வைத்து பாதுகாத்துக் கொள்ளவும்.
மண்பானையில் சமைக்கும் சிட்ரிக் அமிலம் கொண்ட உணவினை சமைக்கக்கூடாது. சிட்ரிக் அமிலம் மண்ணுடன் வினைபுரிந்து சமைக்கும் உணவின் சுவையை பாதிக்குமாம்.
மண் பாத்திரத்தினை குறைந்த வெப்பத்தில் மட்டுமே சமைக்க வேண்டும். அதிக வெப்பத்தில் சமைக்கக்கூடாது. அதாவது குறைந்த வெப்பத்தில் சமைத்தால் அதன் சுவை தனித்துவமாக உணவில் கிடைக்குமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |