அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைக்கிறீர்களா? இனி தவறை செய்யாதீங்க
சமையலறையில் அழுக்கு பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வைத்திருந்தால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.
அழுக்கான பாத்திரம்
அழுக்கான பாத்திரத்தில் நாம் சமைக்கும் போது அது பல நோய்களை கொண்டு வருகின்றது. ஆதலால் பாத்திரம் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இரவில் அழுக்கு பாத்திரத்தை கழுவாமல் சிங்க் தொட்டியில் போட்டுவிட்டால், நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் ஈ.கோலை போன்ற பாக்டீரியாக்கள் அந்த பாத்திரங்களில் வளரக்கூடும். அவற்றை எவ்வளவு கழுவினாலும் அனைத்து கிருமிகளும் வெளியேறாது.
பின்பு அந்த பாத்திரங்களில் உணவு சமைத்து உண்ணும்போது, கெட்ட பாக்டீரியாக்கள் நம் வயிற்றில் சேர்ந்து மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக வயதானவர்கள் குழந்தைகளை அதிகமாக இது பாதிக்கும்.
எனவே, ஆரோக்கியமாக இருக்க பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் போட கூடாது. அழுக்கு பாத்திரங்களை போலவே, உணவை பிரிட்ஜில் நீண்ட நேரம் வைத்தாலும், அது நம்மை நோய்வாய்ப்படுத்தும். மேலும் சிறுநீரக பாதிப்பினையும் ஏற்படுத்தும்.
என்னென்ன பிரச்சனை ஏற்படும்?
உடம்பில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டாமல் இருக்க உணவுப்பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பாக்டீரியா தொற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுடன், வாந்தி மற்றும் வயிறு வலி, வயிற்றுப்போக்கு பிரச்சனையும் ஏற்படலாம்.
அதிகப்படியான உப்பு உங்கள் சிறுநீரகத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீங்கள் அதிக உப்பு மற்றும் சர்க்கரையை உண்ணும்போது, உங்கள் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்வதை கடினமாக்கும். ஒருவருக்கு சிறுநீர் கழிப்பதில் ரத்தம் இருந்தால், சாப்பிட முடியாமல் இருப்பது, முதுகில் வலி காணப்பட்டால் சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்யாமல் இருப்பதாக அர்த்தமாம்.
அதிக எடையும் சிறுநீரகத்தில் நோய் பாதிப்பு ஏற்படுத்தும். மேலும் உங்களது ரத்த அழுத்தத்தினை அதிகரிக்கவும் செய்கின்றது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 10ல் 7 பேருக்கு சிறுநீரக பிரச்சனை இருக்க்லாம். எனவே உங்கள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது சிறந்ததாகும்.
உடற்பயிற்சி செய்வதும், உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, புகை பிடிப்பதை தவிர்த்தல், தண்ணீர் அதிகமாக பருகுதல், நொறுக்குத் தீனியை தவிர்த்தல், வலி நிவாரணி மாத்திரையையும் தவிர்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |