நடிகர் விஜய்யுடன் குக் வித் கோமாளி சிவாங்கி! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய்யுடன் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜய் நடித்த பீஸ்ட்
கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் - பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட்.
இப்படத்தில் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களின் மனதில் கொண்டாட்டத்திற்குரிய படமாகவே மாறியுள்ளது.
டார்க் காமெடி, காதல், ஆக்சன் என ஒரு ஃபுல் மீல்சை விருந்தாக தந்துள்ளார் நெல்சன். இந்நிலையில், விஜய் பீஸ்ட் படத்திற்காக தன்னுடன் பயணித்த நெல்சன், பூஜா ஹெக்டே, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார். இதன் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
நடுரோட்டில் மாறி மாறி அடித்துக்கொண்ட மாணவர்கள்.. வைரலாகும் காட்சி
குக் வித் கோமாளி சிவாங்கி
இந்நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது குறும்புத்தனம் மூலம் மக்கள் பேவரைட் ஆக மாறியுள்ளவர் ஷிவாங்கி.
இவர் பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் உடன் போட்டோ எடுத்துக்கொண்ட போட்டோஸ் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.