குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறிய நபரை குறித்த விபரம் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது மூன்று சீசன்கள் முடிவடைந்த நிலையில், நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.
இதில் விசித்ரா, மைம் கோபி, காளையன், விஜே விஷால், ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின் உள்பட 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ள நிலையில், கடந்த சீசனில் கோமாளியாக கலந்து கொண்ட சிவாங்கி தற்போது குக் ஆக கலக்கி வருகின்றார்.
இந்த சீசனில் கிஷோர், காளையன், ராஜ் அய்யப்பா ஆகியோர் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரம் மைம் கோபியைத் தவிர மற்ற போட்டியாளர்கள் எவிக்ஷனுக்கு வந்துள்ளனர்.
மைம் கோபி கடந்த வாரம் இம்யூனிட்டி பேண்ட் வாங்கியதால் அவர் இந்த வாரம் சமைக்கவில்லை. மற்ற போட்டியாளர்களான விசித்ரா, ஸ்ருஷ்டி, ஷெரின், விஜே விஷால், ஆண்ட்ரியன், சிவாங்கி ஆகிய 6 பேர் போட்டியிட்ட நிலையில், விஜே விஷால் குறைவான மதிப்பெண் எடுத்து போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
ஆனால் விஜே விஷால் கடந்த வாரம் நடுவர்களிடம் நல்ல கருத்தினை பெற்று தற்போது எலிமினேட் செய்யப்பட்டுள்ளது தவறான தெரிவு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.