காமெடியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இந்த வாரம் சோகத்தில் ஆழ்ந்ததற்கான காரணம் என்ன?
காமெடிக்கு பெயர் பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது எமோஷ்னலில் உச்சமாக மாறிய ப்ரமொ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் காமெடியான நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். ஆனால் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களின் ஆனந்த கண்ணீருடன் எமோஷ்னவல் நிகழ்ச்சியாக மாறியுள்ளது.
இது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அதிகப்படியான ரசிகர்கள் இருக்கிறார். வித்தியாசமான சமையல் போட்டியான இந்நிகழ்ச்சியில், செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாகவும், வி.ஜே.ரக்ஷன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தொடங்கியது. இதில் வெங்கடேஷ் பட் விலகியதை தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் புதிய நடுவராக வந்துள்ளார்.
இதில் பிரியங்கா, யூடியூபர் இர்பான், நடிகர் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதில் குக்குகுகளாக பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் காமெடியும் சமையலுமாக சென்றுகொண்டிருந்த இந்நிகழ்ச்சி தற்போது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், இந்த வாரம் மறக்குமா நெஞ்சம் என்ற டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில், நாம் மறக்கப்பட்ட உணவுகளை சமைத்து போட்டியாளர்கள் அதை தங்களது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் டாஸ்க். இதற்காக போட்டியாளர்களின் குடும்பத்தினரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |