ஆரம்பமாக இருக்கும் குக் வித் கோமாளி... சீசன் 5ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் யார் தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 5வது சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில், இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் விபரம் யூகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. தற்போது நான்கு சீசன் முடிவடைந்த நிலையில் ஐந்தாவது சீசன் ஆரம்பமாக உள்ளது.
இன்னும் சில வாரங்களில் தொடங்க இருப்பதாகவும், மக்களின் யூகத்தின் படி யார் உள்ளே செல்கின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக மக்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதுடன், பிக் பாஸ் போன்றே குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் நடுவர்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் இருந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியை ரக்சன், விஜே மணிமேகலை போன்றோர் தொகுத்து வழங்கி வருகின்றனர்.ஒரு சில கோமாளிகள் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் பெயர் யூகத்தின் அடிப்படையில் வெளியாகியுள்ளது. குக்காக நடிகை வடிவுக்கரசி, டப்பிங் கஞைர் தீபா வெங்கட், தம்பி ராமையாவின் மகன் உமாபதி, மாளவிகா மேனன், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா, டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்ஷதா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |