பிக்பாஸ் சீசன் 6ன் முதல் போட்டியாளர் இவரா? குஷியில் ரசிகர்கள்
பிரபல ரிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல், முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த சீசனை மக்கள் ஆவலாக காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பரபரப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் மிக மிக அதிகம். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகின்றது.
இந்த நிகழ்ச்சியில், சினிமா பிரபலங்கள் முதல் யூட்யூப் பிரபலங்கள், மாடல் வரை பல்வேறு போட்டியாளர்களாக களமிறக்கப்பட்ட நிலையில், முதல் சீசனில் ஆரவ், இரண்டாம் சீசனில் ரித்விகா, மூன்றாம் சீசனில் முகேன் ராவ், நான்காம் சீசனில் ஆரி அர்ஜுன், 5 வது சீசனில் ராஜு ஜெயமோகன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
இதுமட்டுமில்லாமல் ஐந்து சீசனைத் தொடர்ந்து அல்டிமேட் நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு, விளையாடிய நிலையில், இதில் பாலா வெற்றியாளராக கோப்பையையும், பரிசுப்பணத்தையும் பெற்றார்.
அல்டிமேட்டில் சில வாரங்கள் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பின்பு சிம்பு தொகுத்து வழங்கி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

அக்டோபரில் தொடங்கும் 6வது சீசன்
இந்நிலையில், விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் தான் பிக்பாஸ் சீசன் 6-ல் முதல் ஆளாக நுழையவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்த ரக்ஷன் கடந்த பிக்பாஸ் சீசன்-5 கலந்து கொள்ள முடியாமல் போனதை தொடர்ந்து, தற்போது பிக்பாஸ் 6-ல் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருகிறதாம்.
மேலும், கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டு வருகிறதாம், இதையடுத்து சீசன் வழக்கம் போல் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.