திருமணத்திற்கு ரெடியான புகழ்! முதல் முறையாக வெளியிட்ட அறிவிப்பு; வைரல் புகைப்படம்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் தான் புகழ். இந்த நிகழ்ச்சிக்கு பின் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டர். பட வாய்ப்புகளால் பிஸியாக இருக்கும், இவர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவர் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை அதிகம் இணையத்தில் பதிவிட்டிருந்தார்.

பின், அந்நிகழ்ச்சியில், பேசிய புகழ் 5 வருடமாக நாங்கள் காதலித்து வருகிறோம். அவரை எனக்கு கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் போகும்போது இருந்தே தெரியும்.
அவர் பெயர் பென்சி. நாங்கள் இந்த அவர் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார்.

திருமணம் எப்போது?
இதனிடையே தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலியுடன் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்துடன் ‘ Coming Soon ‘ என பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் புகழ் இந்த வருடத்திலேயே திருமணம் செய்வது உறுதி என தெரிவித்து வருகிறார்கள்.