குக் வித் கோமாளி நடுவராக சினிமா நடிகர்! அடடே இந்த பிரபலம் தானா?
பிரபல சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் வெங்கடேஷ் பட்.
எந்தவொரு எதிர்மறை விமர்சனங்களும் இல்லாமல் ரசிகர் பட்டாளத்தை கொண்ட நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
கோமாளிகளின் சேட்டைகள், சுட்டித்தனத்தை சமாளித்து குக்-கள் எப்படி சமையலில் அசத்துகிறார்கள் என்பதே நிகழ்ச்சியின் மையக்கரு.
நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தற்போது ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக நிகழ்ச்சியை இயக்கி தயாரித்து வரும் நிறுவனம் தயாரிப்புப் பொறுப்பிலிருந்து விலகி கொள்வதாக அறிவித்தது.
இதனிடையே, நிகழ்ச்சியில் நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தானும் வெளியேறுவதாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
எனவே இவருக்கு பதிலாக யார் நடுவர் என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது, தற்போது இதற்கான விடை கிடைத்துவிட்டது.
அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ப்ரோமோஷூட் முடிந்துவிட்டதாகவும், வெங்கடேஷ் பட்டுக்குப் பதில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறக்கப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் கசிந்துள்ளன.
கோவையை சேர்ந்த சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபகாலமாக சமையலில் அசத்தி வருகிறார், இவர் ஒரு நடிகர் என்பதும் கூடுதல் தகவல்.