Stress இல் இருந்த ரசிகை... ஒரே எபிசோடில் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய குக் வித் கோமாளி
தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்த ஒரு ரசிகையின் வாழ்க்கையை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றிவிட்டதாம்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய கோமாளியான குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் எழுதிய உருக்கமாக கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், அண்ணா இந்த விஷயத்தை நான் சொல்லியே ஆகனும், நீங்க இதுக்கு ரிப்ளே பண்ணுவீங்களானு எனக்கு தெரியாது.
ஆனால் சில நாட்களான நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன்.

எனக்கு என்ன பண்றதுனே தெரியல அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் பார்த்தேன்.
அந்த எபிசோடில் நீங்க ஸ்ருதிகா மாதிரி பேசுன டையலாக் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, இந்த எபிசோடையே கிட்டத்தட்ட 100முறை பார்த்துவிட்டேன் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ சிக்கிரம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று, ரொம்ப எமோஷனலான ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார்.
அந்த பதிவை குரேஷி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து எல்லாத்தும் காரணம் ஸ்ருதிகா தான் கூறியுள்ளார்.
இணையத்தில் இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.