மனைவிக்கு திருமணநாள் வாழ்த்து தெரிவித்த இயக்குனர்- நெகிழ்ச்சியான பதிவு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றிப்பெற்ற கனியின் கணவர் கனிக்கு திருமணநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
கார்த்திகா அகத்தியன்
குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் தான் கார்த்திகா. இந்நிகழச்சியில் கலந்துக் கொண்டதன் பின் காரக்குழம்பு கனி என இன்னும் பிரபலமானார்.
இவர் 2008ஆம் ஆண்டு இயக்குனர் திருவை திருமணம் செய்துக் கொண்டார். மேலும், இவரின் குடும்பம் ஒரு திரைக்குடும்பம் தான்.
இவர் தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குநர் திருவின் மனைவி. நடிகைகள் விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனியின் மூத்த சகோதரி ஆவார்.
காரக்குழம்பு கனியின் உண்மையான பெயர் கார்த்திகா அகத்தியன். ஆனால் இவரை கனி எனதான் பலருக்கு தெரியும்.
திருமண நாள் வாழ்த்து
கனியின் கணவர் திரு தமிழ் சினிமாவில் நான் சிகப்பு மனிதன், சமர் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில், திரு மற்றும் கனி தம்பதிக்கு திருமணம் முடிந்து நேற்றுடன் 15ஆண்டுகள் ஆகின்றது. இயக்குனர் திரு தனது டுவிட்டர் பக்கத்தில் தன் மனைவி கனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியீட்டு ” என்னிடம் நீங்கள் இருக்கும்போது மேலும் கேட்க முடியாது.
உங்கள் வாழ்க்கையின் துணையாக இருப்பதை நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். 15வது ஆண்டு வாழ்த்துக்கள்” என அழகாக ஒரு பதிவிட்டிருந்தார்.
Can’t ask for more when I have you. I feel so lucky to be your partner for life. Happy 15th Anniversary ❤️ @karthigathiru pic.twitter.com/zYY5W7Y1Rd
— Thiru (@dir_thiru) February 10, 2023
மேலும், ரசிகர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.