குக் வித் கோமாளி பாலாவா இது? 10 ஆம் வகுப்பில் இவ்வளவு மார்க் எடுத்த மாணவரா? ஷாக்கில் ரசிகர்கள்...
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதுகை மோனையோடு காமெடி செய்து வரும் பாலா 10 ஆம் வகுப்பில் பள்ளியிலேயே இரண்டாம் இடம் பிடித்தவர்.
இது குறித்த போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாலா காமெடி திறமை பற்றி நமக்கு தெரிந்திருந்தாலும், இதுவரை தெரியாத இவரது படிப்பு திறமை பற்றி தற்போது தெரியவந்துள்ளது.
பாலா காமெடியில் மட்டும் அல்ல படிப்பிலும் படு சுட்டியாம்... பத்தாம் வகுப்பில் 500-க்கு 490 மார்க் வாங்கி பள்ளியிலேயே இரண்டாவது மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கண்டிப்பாக இவர் எந்த அளவிற்கு மார்க் எடுத்திருப்பார் என எதிர்பாராத ரசிகர்கள் பலர், இவருடைய திறமையால் மேலும் உயர்வார் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.