CWC 6-ல் எதிர்பாராத எலிமினேஷன்- வீட்டுக்கு நடையை கட்டிய போட்டியாளர் யார் தெரியுமா?
குக் வித் கோமாளி சீசன் 6 ல் இந்த வாரம் எலிமினேஷனில் வெளியேறிய போட்டியாளர்களின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய ஐந்து சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது சீசனில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீசனில் சின்னத்திரை பிரபலங்களான பிரியா ராமன், சபானா, ராஜு, உமைர், சுனிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகளாக புதிய பிரபலங்களும் சிலர் களமிறங்கியுள்ளனர்.
சமையலை எப்படி நகைச்சுவையுடனும், விருப்பதுடனும் செய்யலாம் என்பதை கருவாகக் கொண்டு நகர்த்தப்படும் இந்த ஷோவின் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.
வெளியேறியவர் யார்?
இந்த நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் வைத்துள்ளார்கள் என்பதால் பிரபலங்கள் யார் வெளியேறப்போவார் என்பதை காண ஆவலுடன் இருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்த வாரம் நடந்து முடிந்த எலிமினேஷன் சேலஞ்ஜில் உமைர், ராஜு மற்றும் பிரியா ராமன் ஆகிய மூவருக்கும் ஆட்டு ஈரலை வைத்து சமையல் செய்தார்கள். அவர்களில், ராஜு மற்றும் பிரியா ராமனின் உணவை விட உமைரின் உணவிற்கு குறைவான மதிப்பெண்கள் இருப்பதால் இந்த வாரம் அவர் வெளியேறியுள்ளார்.
நடுவர்கள் எடுத்த முடிவு நடுநிலையானது இல்லை என நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.
ஆறாவது சீசனில் டாப் 5 போட்டியாளர்களாக லட்சுமி ராமகிருஷ்ணன், நந்தகுமார், ஷபானா, ராஜு, பிரியா ராமன் ஆகிய ஐந்து பேர் இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் டிக்கெட் டூ பினாலே பெற்று இறுதிச் சுற்றுக்கு செல்வார்.
அத்துடன், இந்த வாரம் எலிமினேட் ஆன உமைர், வைல்டு கார்டு மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கலாம் என்றும் இணையவாசிகள் கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |