குக் வித் கோமாளி 4இல் சர்ப்ரைஸ் போட்டியாளர் யார் தெரியுமா? டெரரான வில்லனாக களமிறங்கும் போட்டியாளர்!
எப்படா பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் என காத்திருந்து நிகழ்ச்சி முடிந்த அடுத்த வாரமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தப்போட்டியில் மொத்தம் 10 போட்டியாளர்கள் அதில் 9 போட்டியாளர்கள் இந்தவாரம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தனர். அதில் ஒரு போட்டியாளர் சர்ப்ரைஸாக வைத்திருந்தார்கள்.
இப்போது அந்த சர்ப்ரைஸ் போட்டியாளர் யார்? என்று சில கேள்விகள் எழுந்த நிலையில், அவர்யார் என்பது தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
குக் வித் கோமாளி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றுதான் குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டது.
இதனால் முதலாம், இரண்டாம், மூன்றாம் சீசன் என கடந்து தற்போது நான்காவது சீசன் வரை வந்திருக்கிறது. முந்தைய சீசன்களில் கோமாளிகளாக இருந்த புகழ், குரேஷி, சுனிதா, மணிமேகலை ஆகியோருடன் சில புதிய கோமாளிகளும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
அதில் தொடக்க வார நிகழ்ச்சியில் ஜிபி முத்து வந்திருப்பது மக்களுக்கு இன்னும் இரட்டிப்புக்கொண்டாட்டமாக உள்ளது.
சர்ப்ரைஸ் போட்டியாளர்
முடிந்த வாரம் 9 போட்டியாளர்களை அறிமுகப்படுத்திவிட்டு 10ஆவது போட்டியாளர் சப்ரைஸாக வருவார் என ரக்சன் தெரிவித்திருந்தார்.
அவர்தான் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் மைம் கோபி தான். மேடை நாடக கலைஞரான இவர் மெட்ராஸ், கதகளி,கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அண்மையில் கூட சட்டம் என் கையில் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில், மைம் கோபி தான் குக் வித் கோமாளியில், குக்காக பங்கேற்க இருக்கிறார் என்று தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.