அட நம்ம குக் வித் கோமாளி ஷோ பாபா பாஸ்கரா இது?.. சிறுவயது புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றியுள்ளார் பாபா பாஸ்கர். இவர் தனுஷ், சிவகார்த்திகேயன், சிம்பு போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், பல படங்களுக்கு கோரியோகிராபர்ராக பணியாற்றிய பாபா பாஸ்கர்.
தற்போது விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமையல் கலைஞராக பிரமாதப்படுத்தி வருகிறார். இந்நிலையில், சமூக வலைத்தள பக்கத்தில் பள்ளி பருவ காலத்தில் வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற சிறிய வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம பாபா பாஸ்கர் இப்படி உள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர். ஏனென்றால் பாபா பாஸ்கர் எப்போதுமே சட்டையில் முதல் பட்டன் போடாமல், கழுத்தில் கர்சிப் கட்டியபடி ரவுடி கெட்டப்பில் தான் இருப்பார்.
ஆனால், இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஒன்னும் தெரியாத அப்பாவி போல உள்ளார் என ரசிகர்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.