அரிசியை தண்ணீரில் ஊறவைத்து சமைக்கிறீங்களா? அப்போ இதை எல்லாம் தெரிஞ்சுக்கோங்க
வீட்டில் நாம் சோறு சமைப்பது வழக்கம். என்னதான் உணவு உண்டாலும் சோறு சமைத்து சாப்பிட்டால் தான் உணவு நிறையுணவாக இருக்கும். அந்த வகையில் சிலர் அரிசியை பல முறையில் சமைப்பார்கள்.
அப்படி சமைக்கும் போது சிலர் ஊறவைத்துசமைப்பது வழக்கம். இப்படி சமைப்பதால் அரிசி சோறாகும் போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் தனித்தனியே வரும்.
இப்படி வந்தால் சாப்பிடுவதற்கும் ஆசையாக இருக்கும். ஆனால் இப்படி தண்ணீரில் ஊறவைப்பதால் பல தீமைகள் இருக்கின்றன இதை அறியாதவர்கள் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தண்ணீரில் ஊறவைத்த அரிசி
தற்போது பல நவீன பொருட்களை வைத்து நாம் சமைக்கிறோம். இதன் மூலம் எமது சமையல் எளிதாகின்றன. ஆனால் தற்கால நவீன மற்றும் வேகமான வாழ்க்கை முறையில் நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளையும், அவை அளிக்கும் ஆரோக்கிய நன்மைகளையும் நாம் மறந்து விடுகிறோம்.
தற்போது எல்லோரும் சோறு சமைக்கும் போது அரிசியை ஊறவைக்காமல் அரிசியை ஒருமுறை கழுவி மைக்ரோவேவ் செய்து, குறிப்பிட்டநேரத்தில் எடுத்து விடுகின்றனர். அதன்படி அரிசியை ஊறவைத்து சமைப்பதால் நம்முடைய உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
இப்படி சமைத்தால் தூக்கம் நன்கு வரும் என்பதோடு. செரிமான அமைப்பும் ஆரோக்கியமாக இருக்கும். அரிசியை ஊறவைக்கும் போது ஊட்டச்சத்துக்களும் நன்றாக உறிஞ்சப்படுகின்றன.
இதனால் நொதி முறிவு ஏற்படுகிறது. இது நிகழ்வதன் மூலம் அரிசியில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் எளிய சர்க்கரைகளாக உடைக்கப்படுகின்றன.இதன் காரணமாக நமது உடல் இந்த சத்துக்களை எளிதில் எடுத்துக்கொள்ள உதவும்.
இது தவிர இது அரிசியின் GI லெவலை குறைக்கிறது. ஒரு உணவின் GI லெவல் குறைவாக இருக்கும்போது, அதனை எடுத்துக்கொள்ளும் நபரின் ரத்த சர்க்கரையும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
இப்படி ஊறவைத்து சமைப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கின்றது. ஆனால் சிலர் சுமார் 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைப்பார்கள். ஆனால் இப்படி செய்வதன் மூலம் அரிசியிலுள்ள வைட்டமின் மற்றும் மினரல்ஸ் தண்ணீரில் கரைந்து விடுகின்றன.
இந்த காரணத்தினால் அரிசியில் உள்ள அரிசியில் உள்ள சத்துக்கள் அழிக்கப்பட்டு சக்கையை உணவாக உண்ண வழிவகுகின்றன. எனவே அரிசியை சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம். அதேபோல தண்ணீரில் நன்கு கழுவி சமைக்கலாம். இது அரிசியின் அமைப்பை சரியாக வைத்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |