அன்சீனால் கிளம்பிய சர்ச்சை! பிக்பாஸ் வீட்டில் போன் யூஸ் பண்றாங்களா? ஷாக்கில் பார்வையாளர்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் போன் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
நேற்றைய அன்சீன் காட்சிகள் ஹாட்ஸ்டாரில் வெளியானது.
இதில் இமான் அண்ணாச்சியும், பிரியங்காவும் மொபைல் போனில் பேசுவதாக ஒரு காட்சி சிக்கியது.
அப்படியானால் பிக்பாஸ் வீட்டிற்குள் போன் பயன்படுத்தப்படுவது உண்மை தானா என நெட்டிசன்கள் கேட்க துவங்கி விட்டனர்.

ஆனால் விசாரித்து பார்த்ததில் அவர்கள் போனில் பேசவில்லையாம். மைக்கை தான் போன் போல் வைத்து பேசுவதாக இருவரும் ஃபன் செய்தார்களாம். ஹவுஸ்மெட்களை என்டர்டைன் செய்வதற்காக இருவரும் அப்படி நடித்ததாக கூறப்படுகிறது.
இருந்தாலும் அண்ணாச்சி பேசுவதாக காட்டப்படும் அந்த சீன், அவர் நிஜமாகவே போனை காதில் வைத்து பேசுவது போலவே உள்ளது. இதனால் ரசிகர்கள், ஃபன் செய்த காட்சி என சொல்லும் காரணத்தை ஏற்க மறுத்து, தொடர்ந்து பல சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் வட்டாரங்கள், நெட்டிசன்களுக்கு பதில் மற்றம் விளக்கம் சொல்லி இப்போதே டயர்ட் ஆகி விட்டனராம். ஒரு வாரத்திற்கே இப்படி என்றால் இன்னும் 100 நாட்களை எப்படி நாங்கள் சமாளிக்க போகிறோம் என மிரண்டு போய் உள்ளார்களாம்.