தொடர்ந்து கம்யூட்டரில் பணிபுரிபவரா நீங்கள்? 20 நிமிடத்திற்கு 20 நொடிகள் கண்டிப்பா இதை செய்யனுமாம்
நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும்.
நமது ஆன்மாவின் கண்ணாடியாக செயல்படுவது கண்கள். அது வெளி உலகை காணும் ஜன்னலாக செயல்படுகிறது. கண்கள் உங்கள் அழகை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆரோக்கியத்தையும் வெளிப்படுத்துகிறது. நமது வாழ்க்கை முறையே, நமது கண்களின் ஆரோக்கியத்தை நிர்மாணிக்கும் விஷயம் ஆகும். நீண்ட நேரமாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டரின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு, அந்த முழு நேர பளு சுமையே கண்களை பாதிக்கும் முக்கிய காரணி.
இதற்கு பல காரணங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் திரைக்கு மிக அருகில் உட்கார்ந்திருத்தல், ஜன்னலில் இருந்து திரையின் மீது படும் கண் கூசும் ஒளிவீச்சு, திரையின் மீதுள்ள தெளிவற்ற எழுத்துக்கள், திரையில் இருந்து உள்ள வசதியற்ற பார்வைக் கோணம், திரையின் மீது நீடித்த மற்றும் மாறாத இமையாத பார்வை போன்றவை இதற்கு காரணமாகின்றன.
இதற்காக கம்ப்யூட்டர் அருகில் அமர்ந்து, வேலை செய்வதை நிறுத்துவது உகந்தது அல்ல. எனவே அடுத்த தீர்வாக, கண்களை பராமரிப்பதே சிறந்த வழி. இங்கு சில கண் பராமரிப்பு டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் முழு நேர தொடர்ச்சியான கம்ப்யூட்டர் வேலையால்,கண்களில் பணிச்சுமை மற்றும் ஸ்ட்ரைன் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.