ஷபானாவுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கா? ஆசை குறித்து ஓபன் டாக்!
செம்பருத்தி சீரியல் புகழ் நடிகை ஷபானா, நிறைய பணம் சம்பாதித்து என்ன செய்ய வேண்டும் என்ற தனது ஆசை குறித்து வெளிப்படையாக பேசியுள்ள விடயங்கள் தற்போது இணையத்தில் பராட்டுக்களை குவித்து வருகின்றது.
நடிகை ஷபானா
பிரபல தொலைக்காட்சியில் 1000 எப்பிசோடுகளை கடந்து ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் பார்வதியாக சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்காதாத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷபானா.
செம்பருத்தி சீரியல் மக்களின் அமோக வரவேற்பை பெற்றதுடன் அவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.
அதனை தொடர்ந்து பிரபல தொலைக்பாட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் மனைவி என்ற தொடரில் நடித்து வந்த ஷபானா, அதிலிருந்து இடையிலேயே வெளியேறிவிட்டார்.
அதற்கிடையில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடும் எதிர்ப்புகளையும் மீறி இருவரும் திருமண வாழ்க்கையில் மகிழ்சியாகவும் மற்ற தம்பதிகளுக்க முன்னுதாரணமாகவும் இருந்து வருகின்றனர்.
ஷபானா தற்போது குக் வித் கோமாளி நிகழ்சியில் குக்காக பங்கேற்று அசத்திவருகின்றார். இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் ஷபானா தனது ஆசை குறித்து பேசியுள்ள விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷபானா ஓபன் டாக்
அதில் ஷபானா குறிப்பிடுகையில், வாழ்வில் நிறை பணம் சம்பாதித்து குறைந்தது இரண்டு மூன்று பேரின் கல்விக்காவது உதவி செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.
காரணம் நான் ஸ்பான்சரில் படித்த ஒரு நபர் தான். என்னை படிக்கவைத்தவர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் நிச்சயம் நான் அதை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பார்பதற்கு விளையாட்டாக நடந்துக்கொள்ளும் ஷபானாவுக்கு இப்படி ஒரு பக்கம் இருக்கா? என வியப்படையும் நெட்டிசன்கள் இணையத்தில் இவரின் ஆசைக்கு பராட்டுக்களை தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
