பப்ஜி மதனை அடுத்து.. சிக்கப்போகும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து! அதிர்ச்சி புகார்
கடந்த நாட்களுக்கு முன்பு யூடியூப்பில் ஆபாசமாக பேசியதால் பப்ஜி மதன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரைப்போன்று பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக பேசி வருவதையும் கண்டித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஆபாசமாக பேசி வீடியோக்களை வெளியிட்டு கலாச்சாரத்தை சீரழிப்பதாக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து மற்றும் ரவுடி பேபி சூர்யா உள்ளிட்ட 4 பேர் மீது இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எம்.எம்.கே.முகைதீன் என்பவர் அனுப்பி உள்ள புகாரில், சமீபகாலமாக வலைதளங்களில் ஆபாச வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது.
தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதை பயன்படுத்திய பேஸ்புக் , ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிகின்றனர்.
அவர்களில், டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, திருச்சி சாதனா, பேபி சூர்யா, சிக்சர் என்ற சிக்கந்தர் என அவர்களின் மீது புகார் அளித்துள்ளார்..